சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு: உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்

புதுடெல்லி: சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் மேற்கு வங்க அதிகாரிகளுக்கு எதிரான சிபிஐ.யை மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து விலகுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தெரிவித்துள்ளார்.மேற்கு வங்க மாநிலத்தில்  சாரதா சிட்பண்ட் நிறுவன மோசடி தொடர்பான வழக்கு கடந்த 2013ம் ஆண்டு சிபிஐ.க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தொடர்ந்து வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றது. இந்நிலையில்  சிபிஐ விசாரணைக்கு  இடையூறு ஏற்படுத்துவதாக மேற்கு வங்க தலைமை செயலாளர் மலய் குமார், டிஜிபி வீரேந்திர குமார், கொல்கத்தா போலீஸ் ஆணையர் ராஜீவ் குமார் ஆகியோர் மீது உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ குற்றஞ்சாட்டியது. கடந்த 5ம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு , சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும், குற்றச்சாட்டு தொடர்பாக பதில் தாக்கல் செய்யும்படியும் சம்பந்தப்பட்ட மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. 

இதனை தொடர்ந்து தலைமை செயலளார் மலய் குமார்,  டிஜிபி வீரேந்திரகுமார், போலீஸ் ஆணையர் ராஜீவ்குமார் ஆகியோர் கடந்த 18ம் தேதி தனித்தனியாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். 

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள்  நாகேஷ்வர ராவ், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நாகேஸ்வரராவ், சாரதா நிதி மோசடி வழக்கு விசாரணைக்கு மாநில அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவதாக தொடரப்பட்ட மனு தொடர் பான விசாரணை அமர்வில் இருந்து தான் விலகுவதாக தெரிவித்தார். வழக்கில் மேற்கு வங்க அரசு சார்பாக வழக்கறிஞராக ஆஜராக உள்ளதால் இந்த வழக்கு விசாரணை அமர்வில் பங்கேற்க இயலாது என்று அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அமர்வில் இடம்பெற்ற ஒரு நீதிபதி வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதால் வழக்கு வருகிற 27ம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: