புதுச்சேரியில் 23ம் தேதி பாமக சிறப்பு பொதுக்குழு: ஜி.கே.மணி அறிவிப்பு

சென்னை: பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கை: பாமகவின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வரும் 23ம் தேதி சனிக்கிழமை  காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை புதுச்சேரி டோல்கேட் அருகில் உள்ள சங்கமித்ரா திருமண அரங்கில் நடக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி முன்னிலையில் நடைபெறும்  பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமையேற்கிறார். கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன்,  பொருளாளர் திலகபாமா ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் குறித்து இந்தக் பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: