காஷ்மீரில் ரிமோட் சாவி மூலம் வெடிகுண்டு தாக்குதல்: விசாரணை அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: வாகனங்களில் பயன்படுத்தப்படும் ரிமோட் சாவி மூலம், காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது என்று விசாரணை அதிகாரிகள் தாக்கல் செய்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. புல்வாமா தாக்குதலிலும், தற்கொலைப்படை தீவிரவாதி இந்த முறையில் வெடிகுண்டை வெடிக்கச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த 14ம் தேதி நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தீவிரவாதி ஆர்டிஎக்ஸ் கலந்த வெடிப்பொருட்களை காரில் கொண்டு வந்து தாக்குதல் நடத்தியுள்ளான்.  இது குறித்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், காஷ்மீரில் நடக்கும் வெடிகுண்டு தாக்குதலில் என்ன தொழில்நுட்பம் பரவலாக பயன்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: காஷ்மீரில் நடக்கும் வெடிகுண்டு  சம்பவங்களை ஆய்வு செய்தபோது, வாகன திருட்டை தவிர்ப்பதற்காக பொருத்தப்படும் எச்சரிக்கை கருவி தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ரிமோட் சாவி மூலம் இந்த கருவிகள் இயக்கப்படுகின்றன. காஷ்மீரின் சோபியான மாவட்டத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலிலும், ரிமோட் சாவி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரானிக் எச்சரிக்கை கருவிகள் நாடு முழுவதும் மார்க்கெட்டுகளில் தாராளமாக கிடைக்கிறது. பாதுகாப்பு படையினருடன் நேரடி மோதலை தவிர்க்க விரும்பும் தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினருக்கு அதிகளவில் உயிரிழப்பை ஏற்படுத்த ரிமோட் கண்ட்ரோல் குண்டுகளை பயன்படுத்துகின்றனர் என கூறப்பட்டுள்ளது. இந்த முறையை மற்ற மாநிலங்களில் உள்ள நக்சல்கள் பின்பற்றி வந்தனர். தற்போது காஷ்மீர் தீவிரவாதிகளும் இந்த ரிமோட் சாவி குண்டுகளை அதிகம் பயன்படுத்தலாம் என்பதால், பாதுகாப்பு படையினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: