அரசுக்கு எதிராக வாட்ஸ்அப்பில் விளம்பரம் பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

சேலம்: ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது அரசுக்கு எதிராக வாட்ஸ்அப்பில் விளம்பரம் செய்ததாக முள்ளுவாடி பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ சார்பில் கடந்த மாதம் போராட்டம் நடந்தது. இதில், கலந்து கொண்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதுடன், சஸ்பெண்டும் செய்யப்பட்டனர். தொடர்ந்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், சஸ்பெண்ட் நடவடிக்கை கைவிடப்பட்டது.

இந்நிலையில், சேலம் முள்ளுவாடி கேட் அருகே துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அபூபக்கர், ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது அரசுக்கு எதிராக, தனி விளம்பரங்களை தயாரித்ததாகவும், அவற்ைற வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகவும் புகார் எழுந்தது. இதன் அடிப்படையில், தலைமை ஆசிரியர் அபூபக்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, தாரமங்கலம் அடுத்த மல்லிகுட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ராம்குமார் என்பவர், இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது வகுப்பு நேரங்களில் செல்போனில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில், ஆசிரியர் ராம்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதேசமயம், இந்த இரண்டு சஸ்பெண்ட் நடவடிக்கைகளும் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சர்ச்சை எழுந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: