மதுரை : மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் காத்திருப்பு அறைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் எவ்வளவு ஆக்கிரமிப்புகள் உள்ளன என்றும், அதை அகற்ற என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து மதுரை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
