மக்களவை தேர்தலை திமுக தலைமையிலான கூட்டணியின் கீழ் சந்திப்போம்: வி.சி.க தலைவர் திருமாவளவன் பேட்டி

சென்னை: மக்களவை தேர்தலை திமுக தலைமையிலான கூட்டணியின் கீழ் சந்திப்போம் என வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை சொத்துக்களை அபகரிக்க முயற்சிக்கும் கட்சிகளுக்கு எதிராக கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பின் செய்தயாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சியினர் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதில், காலையில் ஒன்று மலையில் ஒன்று என புரட்டி பேசுவதுதான் பாமக எனவும், தேர்தலுக்கு தேர்தல் திராவிட கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளை கடுமையாக விமர்சிப்பது என்ற அணுகுமுறை பாமகவுக்கு வாடிக்கையான ஒன்று எனவும் விமர்சித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர், விடுதலை சிறுத்தை கட்சியை பொறுத்தவரை திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். கூட்டணியில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தை பொறுத்தவரை மத்திய அரசு நட்பு பாராட்டிக்கொண்டு அதிமுக அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார். ஆனால் மேற்குவங்கத்தில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் வெளிப்படையான முரண்பாடு நிலவி வருவதாக தெரிவித்த அவர், அதிமுகவை அச்சுறுத்தி கூட்டணி வைக்க பாஜக முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். எனவே பெரும்பாலும் பாஜ கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என வி.சி.க தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: