கால்டாக்சி டிரைவர் தற்கொலைக்கு காரணமான போலீஸ் மீது நடவடிக்கை கோரி வேன் டிரைவர்கள் போராட்டம்

சென்னை: கால்டாக்சி டிரைவர் தற்கொலைக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி வேன் டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கால்டாக்சி டிரைவர் ராஜேஷ். இவர், போலீசாரின் டார்ச்சர் தாங்க முடியாமல் கடந்த சில தினங்களுக்கு முன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பான வாக்குமூல வீடியோ சமூக வலைதளத்தில்  வெளியாகி ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து, கால்டாக்சி டிரைவர் தற்கொலைக்கு காரணமான போலீசாரை கண்டித்து 100க்கும் மேற்பட்ட கால்டாக்சி மற்றும் டெம்போ வேன் டிரைவர்கள் துரைப்பாக்கம் 200 அடி சாலையில் நேற்று காலை திரண்டனர். பின்னர்,  திடீரென வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது டிரைவர் ராஜேஷ் தற்கொலைக்கு காரணமான போலீசாரை கண்டித்தும், சம்பந்தப்பட்ட காவலர்களை உடனடியாக கைது செய்யக் கோரியும் கோஷம் எழுப்பினர். போராட்டத்தால் அங்கு போக்குவரத்து கடுமையாக  பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.தகவலறிந்து துரைப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து டிரைவர்களிடம் சமாதானம் கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: