கோயில் நிலங்களை மீட்க கோரிய வழக்கு 4 மாவட்ட கலெக்டர்களுக்கு ஐகோர்ட் கிளைநோட்டீஸ்

மதுரை:  கோயில் நிலங்களை மீட்க கோரிய வழக்கில் 4 மாவட்ட கலெக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.  திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் சமஸ்தானத்தின் கீழ் திருவாடானையில் உள்ள ஆதிரெத்னேஸ்வரர் கோயிலுக்கும், சமஸ்தானத்திற்கும் சொந்தமான நிலங்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், இலங்கையிலும் உள்ளன. இந்த சொத்துக்கள் பலரது ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால் உரிய வருமானமின்றி கோயில் திருப்பணிகள் பாதிக்கிறது. எனவே, சமஸ்தானத்திற்கு சொந்தமான கோயில் நிலங்களை மீட்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இதேபோல் மற்ெறாரு மனுவில், புதுக்கோட்டை கோயில் நிர்வாக அலுவலர் கட்டுப்பாட்டில், புதுக்கோட்ைட, திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 211 கோயில்களுக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இவற்றை மீட்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

 இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.ேக.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள், ராமநாதபுரம், புதுக்ேகாட்டை, திருச்சி, கரூர் மாவட்ட கலெக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை பிப். 18க்கு தள்ளி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: