ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பி.எஸ் நாளை ஆஜராகவில்லை...ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி

சென்னை: நிர்வாக பணி காரணங்களுக்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் நாளை ஆஜராகமாட்டார் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பிப்.5ம் தேதி ஆஜராக துணை முதல்வருக்கு, ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஆணையத்தின் விசாரணையில் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறிய வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், நாளை ஓ.பி.எஸ். ஆஜரானால் சசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபிப்போம் எனக் கூறினார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னதாக சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில் நிர்வாக பணி காரணங்களுக்காக நாளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விசாரணைக்கு ஆஜராக மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: