மாயாவதியை திருநங்கையுடன் ஒப்பிட்ட பாஜ பெண் எம்எல்ஏ.வுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி குறித்து அவதூறாக பேசிய பாஜ எம்எல்ஏ.வுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப உள்ளது. கடந்த 1995ம் ஆண்டு லக்னோவில் உள்ள விருந்தினர் மாளிகையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி கட்சி தொண்டர்களால் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பகையை  இரு கட்சிகளும் மறந்து, உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் பாஜ.வுக்கு எதிராக மக்களவை தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளனர்.

 இந்த கூட்டணியை இம்மாநிலத்தை சேர்ந்த பாஜ. பெண் எம்எல்ஏ.வான சாதனா சிங் விமர்சித்ததோடு, மாயாவதி குறித்து அவதூறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சாதனா சிங், மாயாவதி  அதிகாரத்துக்காக தனது கண்ணியத்தை விற்று விட்டார். பெண்ணினத்துக்கே அவர் ஒரு கறையாகி விட்டார். அவர் திருநங்கைகளை விடவும் மோசமானவர் என்றார். இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம்  தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு சாதனா சிங்குக்கு அது நோட்டீஸ் அனுப்ப உள்ளது.இது குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கூறுகையில், பெரிய கட்சியின் தலைவராக இருக்கும் ஒரு பெண்ணை இவ்வாறு தரக்குறைவாக விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. இது குறித்து விளக்கம் கேட்டு  சாதனாவுக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பும் என்றார்.   

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: