நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு வியாபாரம் செய்யும் கூட்டு கம்பெனியாக செயல்படும் அதிமுக : ஆர்.எம்.வீரப்பன் குற்றச்சாட்டு

சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பின்பு வியாபாரம் செய்யும் கூட்டு கம்பெனியாக அதிமுக செயல்படுகிறது என்று ஆர்.எம்.வீரப்பன் குற்றம்சாட்டினார். எம்ஜிஆர் கழக பொதுக்குழுக்கூட்டம் சென்னையில் நேற்று கட்சி தலைவர் ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் நடந்தது. இதில், திமுக தலைவரும், 13 முறை எம்எல்ஏவும், 5 முறை முதல்வராக இருந்த கலைஞருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஆர்.எம்.வீரப்பன் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளோம்.

எம்ஜிஆர் மறைவுக்கு பின்பு அதிமுகவை ஜெயலலிதா கைப்பற்றியதும் வியாபாரம் செய்யும் கூடாரமாக அதிமுக மாறிவிட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அதிமுக, வியாபாரம் செய்யும் கூட்டு கம்பெனியாக செயல்படுகிறது. அமைச்சர்களுக்கு மக்களை பற்றி கவலையில்லை. பதவியை தக்க வைப்பதில்தான் அக்கறை காட்டுகின்றனர். அமைச்சர்கள் அனைவரும் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக கூடுதல் நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்தில் 8 வழிச்சாலை என்ற பெயரில் விவசாய நிலங்களை கைப்பற்றும் அரசின் முடிவை கைவிட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: