சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கை வெட்கக்கேடு : பிரதமர் மோடி கடும் தாக்கு

கொல்லம்: சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் வெட்கக்கேடான செயல் வரலாற்றில் இடம் பெறும்’’ என கொல்லத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். கேரளாவின் கொல்லத்தில் ரூ.352 கோடி மதிப்பில் 13 கி.மீ நீளம் கட்டப்பட்ட பைபாஸ் நெடுஞ்சாலையை  பிரதமர் மோடி நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இதன் மூலம் ஆலப்புழா-திருவனந்தபுரம் இடையேயான பயண நேரம் வெகுவாக குறையும். அதன்பின் இங்கு நடந்த பா.ஜ கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

கடந்த சில மாதங்களாக இந்த நாடே, சபரிமலை விவகாரம் பற்றி பேசிவருகிறது. சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கை வெட்கக்கேடானது. இது வரலாற்றில் இடம் பிடிக்கும். இந்திய வரலாற்றையும், பண்பாட்டையும், ஆன்மீகத்தையும், கம்யூனிஸ்ட்கள் மதிக்கமாட்டார்கள் என்பது நமக்கு தெரியும். ஆனால் இவ்வளவு வெறுப்புடன் நடந்து கொள்வார்கள் என யாரும் கற்பனை செய்துகூட பார்க்கவில்லை.

இந்த விஷயத்தில் பா.ஜ.வின் நிலைப்பாடு எப்போதும் தெளிவாக இருக்கிறது. நமது கட்சியின் சொல்லும், செயலும் ஒன்றாக இக்கிறது.கேரளாவின் கலாச்சாரத்துடன் இணைந்து செயல்படும் ஒரே கட்சி பா.ஜ.தான். கேரள மக்களுக்காக மத்திய அரசு இரவு பகலாக பணியாற்றி வருகிறது. ஆனால் கேரள அரசு மதப் பிரச்னைகளில் ஈடுபட்டு நல்லிணக்கத்தை சீர்குலைப்பது வருத்தம் அளிக்கிறது. கேரளாவின் காங்கிரஸ் கூட்டணியும், கம்யூனிஸ்ட் கூட்டணியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். பெயரளவில்தான் இவர்கள் வேறுபட்டவர்கள். ஆனால் இருவரும் கேரளாவின் பண்பாட்டை சீர்குலைக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

சபரிமலை சென்ற பெண் மீது மாமியார் தாக்கு

கேரளா மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கனகதுர்கா(44). இவர் 2 வாரங்களுக்கு முன்பு தனது தோழி பிந்து என்பவருடன் சபரிமலை சென்று தரிசனம் செய்தார்.  கடந்த 2 வாரமாக தலைமறைவாக இருந்த இவர் நேற்று முன்தினம் பெரின்தால்மன்னா என்ற பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார். வீட்டுக்குள் நுழைந்ததும், இவருக்கும், இவரது மாமியாருக்கும் சபரிமலை சென்றது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் கனகதுர்காவை அவரது மாமியார் கட்டையால் தாக்கியுள்ளார். காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: