தேனியில் பள்ளி மாணவியின் குடும்பத்தினருக்கு வீடு கட்டி கொடுத்தார் ஓ.பன்னீர் செல்வம்

தேனி: தேனியில் பள்ளி மாணவியின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சொந்த செலவில் வீடு கட்டி கொடுத்துள்ளார். சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த சந்திரசேகர் என்ற கூலி தொழிலாளி வேலை செய்யும் போது கீழே விழுந்ததில் நடக்கும் திறனை இழந்தார். இதனால் அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்த சந்திரசேகரின் மகள் அனிதா, படிக்க முடியாமல் சிரமப்பட்டார். இதையறிந்த துணை முதல்வர் பன்னீர் செல்வம், ஒன்பது மாதங்களுக்கு முன்பு மாணவியின் உதவிக்காக 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கி உதவினார்.

இந்நிலையில் மாணவியின் குடும்பத்தினருக்கு 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் மாடி வீடு கட்டித் கொடுத்துள்ளார். வீட்டின் சாவியை மாணவியிடம் பன்னீர் செல்வமே வழங்கினார். மாணவி அனிதாவின் படிப்பு செலவை நடிகர் விஷால் ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: