கொடநாடு கொலை விவகாரம்....... விசாரணைக்கு தயார்: மேத்யூஸ் பரபரப்பு பேட்டி

டெல்லி: கொடநாடு கொலை பற்றிய ஆவணப்படம் குறித்த விசாரணைக்கு தயாராக இருப்பதாக அப்படத்தை எடுத்த செய்தியாளர் மேத்யூஸ் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழக போலீசின் விசாரணையை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். தம்மை விசாரிக்க இதுவரை தமிழக போலீஸ் யாரும் வரவில்லை. தம்முடைய குற்றச்சாட்டில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. கொடநாட்டில் 5 பேரை கொலை செய்தது எடப்பாடி பழனிச்சாமிதான். அடுத்த பொங்கலுக்கு எடப்பாடி பழனிச்சாமி சிறையில் இருப்பார். 5 பேரை கொலை செய்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி தப்பித்து விட முடியாது.

முழுக்க முழுக்க செய்தியாளர் என்ற அடிப்படையில் நான் சேகரித்த தகவல்களை கூறுகிறேன். கொடநாடு கொலையில் உண்மை வெளிவர வேண்டும் என மேத்யூஸ் வலியுறுத்தியுள்ளார். வேண்டுமானால் தமிழக போலீஸ் சட்டப்படி தம்மை கைது செய்யலாம். தமிழக அரசு நியாயமான, நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட்டால், சயன் வாக்குமூலம் கொடுக்க தயாராக இருப்பதாக மேத்யூஸ் கூறியுள்ளார். எடப்பாடிக்கு தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரம் தம்மிடம் இருப்பதாக மேத்யூஸ் தெரிவித்தார்.

சயன் பேட்டி

உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாராக இருப்பதாக சயன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: போலீஸ் தரப்பில் இருந்து தொலைப்பேசி அழைப்போ, தகவலோ இதுவரை வரவில்லை. கொடநாடு கொலை குறித்து சிபிஐ புலன் விசாரணை நடத்த வேண்டும். கனகராஜ் கூறித்தான் எடப்பாடிக்கு கொடநாடு கொள்ளையில் தொடர்பிருப்பது தெரியும். கேரளா போலீஸ் பாதுகாப்பு அளிக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: