மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 4 பேர் உயிரிழப்பு: சம்பவ இடத்திற்கு விரைகிறார் முதல்வர் மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சியால்டா செல்லும் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. டார்ஜிலிங் மாவட்டம் பனிஷ்தேவா பகுதியில் நின்று கொண்டிருந்த கஞ்ஜன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதியது. தகவல் அறிந்த பேரிடர் மீட்புக்குழுவினர், ரயில் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்துள்ளனர். ரயில் விபத்தில் பல பெட்டிகள் தடம்புரண்டன.

சரக்கு ரயில் மோதியதில் பயணிகள் ரயிலின் கடைசி 3 பெட்டிகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. ரயில் விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்திருக்கக்கூடும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்க்க 30-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்து நிகழ்ந்த பகுதிக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; டார்ஜிலிங் மாவட்டத்தில் நடந்த பயங்கர ரயில் விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலில் மோதியதாக கூறப்படுகிறது. மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

The post மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 4 பேர் உயிரிழப்பு: சம்பவ இடத்திற்கு விரைகிறார் முதல்வர் மம்தா பானர்ஜி appeared first on Dinakaran.

Related Stories: