மும்பை வடமேற்கு தொகுதியில் EVM-ல் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி: மும்பை வடமேற்கு தொகுதியில் EVM-ல் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. பாஜக கூட்டணி வேட்பாளரது உறவினரின் செல்போன் EVM இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருந்து ஏன் என காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து இந்த தொகுதியில் போட்டியிட்ட பல வேட்பாளர்களிடம் இருந்தும் இது தொடர்பான புகார் வந்ததாகவும். அதன் அடிப்படையில் மங்கேஷ் பாண்டிகர் செல்போன் கொடுத்ததாக தேர்தல் பணியாளர் தினேஷ் குராவ் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக கங்கிரஸ் கட்சியின் எக்ஸ் வலைதள பக்கத்தில்:
EVM தொடர்பான தீவிர வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மும்பையில் தேசிய ஜனநாயக கூட்டணி, வேட்பாளர் ரவீந்திர வைகரின் உறவினர் ஒருவரின் மொபைல் போன், E.V.M., உடன் இணைக்கப்பட்டது. இந்த NDA வேட்பாளர் வெறும் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அத்தகைய சூழ்நிலையில், கேள்வி
* தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரின் உறவினரின் மொபைல், இவிஎம்முடன் இணைக்கப்பட்டது ஏன்?
* வாக்குகள் எண்ணப்படும் இடத்திற்கு மொபைல் போன் எப்படி வந்தது?
சந்தேகங்களை எழுப்பும் பல கேள்விகள் உள்ளன. தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும்.

The post மும்பை வடமேற்கு தொகுதியில் EVM-ல் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: