கட்டிட மேஸ்திரியை கடத்தி 10 லட்சம் கேட்டு மிரட்டல்: கள்ளக்காதலி உட்பட 7 பேர் கைது

சென்னை: சென்னை ஐசிஎப் பகுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்கு வங்கத்தை ேசர்ந்த அபிஜித்தாஸ் (45), மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். நொளம்பூரில் உள்ள மற்றொரு கட்டுமான நிறுவனத்திலும் பணிபுரிகிறார். இவரிடம் வேலை ெசய்யும் தொழிலாளர்கள் ஐசிஎப் தெற்கு காலனி, 4வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு குடியிருப்பில் தங்கி உள்ளனர்.  இவர்களுக்கு சமையல் செய்ய ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜெசினா (32) என்பவர் உள்ளார். இவருக்கும், அபிஜித்தாசுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கடந்த 6ம் தேதி இரவு அபிஜித்தாஸ் கள்ளக்காதலி ஜெசினாவுடன் ஐசிஎப் குடியிருப்பில் தங்கி உள்ளார்.

இரவு 12.30 மணிக்கு, அங்கு காரில் வந்த 5 வாலிபர்கள், அதிரடியாக உள்ளே புகுந்து கட்டிட மேஸ்திரி அபிஜித்தாசை கத்திமுனையில் கடத்தி, வளசரவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து ைவத்தனர். பின்னர், மேஸ்திரி வேலை செய்யும் கட்டுமான நிறுவனத்தின் பொறியாளர் புருஷோத்தமன் (45) என்பவருக்கு போன் செய்து, ‘‘உங்கள் ஊழியர் அபிஜித்தாசை கடத்தி வந்துள்ளோம். 10 லட்சம் கொடுத்தால் அவரை உயிருடன் விட்டு விடுகிறோம்,’’ என்று கூறியுள்ளனர். எதிர்முனையில் பேசிய இன்ஜினியர் புருஷோத்தமன், ‘‘அவர் எங்களிடம் வேலை தான் செய்கிறார். அவருக்கு நாங்கள் எப்படி அவ்வளவு பணம் கொடுக்க முடியும்,’’ என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனால் ஏமாற்றமடைந்த கடத்தல் கும்பல், மேஸ்திரியிடம் இருந்த ஏடிஎம் கார்டை வாங்கி அதன் மூலம் 20 ஆயிரம் எடுத்துள்ளனர்.  இதற்கிடையே, இன்ஜினியர் புருஷோத்தமன் மற்றும் மேஸ்திரியின் சகோதரர் ராஜிதாஸ் (32) ஆகியோர் புகாரின் பேரில், ஐசிஎப் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சந்தேகத்தின்பேரில், மேஸ்திரியின் கள்ளக்காதலி ஜெசினாவை பிடித்து விசாரணை நடத்தியபோது, மேஸ்திரியிடம் அதிகளவில் பணம் இருந்ததால், தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து அவரை கடத்தியது தெரியவந்தது.

பிறகு ஜெசினாவின் உதவியுடன் போலீசார் மேஸ்திரியை கடத்திய ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கட்டுமான நிறுவன மேற்பார்வையாளர் திருலோச்சம் (40), ராகேஷ் குமார் தாஸ் (38), அசாம் மாநிலத்தை சேர்ந்த கட்டுமான ஊழியர் ஜமாலுதீன் (38), கிண்டி பாரதி நகரை சேர்ந்த கார் ஓட்டுனர் சரவணன் (32) ஆகிய 4 பேரை அதிரடியாக வளசரவாக்கத்தில் கைது செய்தனர். பின்னர், கள்ளக்காதலி ஜெசினா (33), கடத்தலுக்கு உதவிய ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிட்டூ (28), மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராகேஷ் திலகாம் (23) ஆகிய மூன்று பேரையும் ேநற்று போலீசார் கைது செய்தனர்.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: