பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலை: சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து ஹமீது அன்சாரி நன்றி

டெல்லி: பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்தியப் பொறியாளர் ஹமீது அன்சாரி, டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். மும்பையை சேர்ந்தவர் ஹமீத் நிகால் அன்சாரி (33). இவர், சமூக வலைதளமான பேஸ்புக் மூலமாக பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணை பார்ப்பதற்காக கடந்த 2012ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்றார். அங்கு, உரிய ஆவணங்கள் இன்றி நுழைந்ததாக உளவுதுறையால் ஹமீத் கைது செய்யப்பட்டார். ஹமீத்துக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவர், பெஷாவர் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 15ம் தேதியுடன் அவரது 6 ஆண்டு சிறை தண்டனை காலம் முடிந்தது. இந்நிலையில், ஹமீத் நாடு திரும்புவதற்கான நடைமுறைகளை இந்த மாதத்திற்குள் முடிக்கும்படி பாகிஸ்தான் அரசுக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து மார்டன் சிறையில் இருந்து நேற்று ஹமீத் விடுதலை செய்யப்பட்டார். இதனையடுத்து ஹமீத் வாகா எல்லையில் இந்திய மண்ணை முத்தமிட்டு பெற்றோருடன் இணைந்தார். இந்நிலையில் இன்று டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து, தனது விடுதலைக்கு அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: