மலையாள நடிகை பலாத்கார வழக்கு : திலீப்பிடம் மெமரி கார்டு வழங்க கேரளா எதிர்ப்பு

திருவனந்தபுரம்: ‘மலையாள    நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை நடிகர்    திலீப்புக்கு வழங்கக் கூடாது’ என்று உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு அறிக்கை    தாக்கல் செய்துள்ளது.பிரபல மலையாள நடிகை காரில் கடத்தி பலாத்காரம்    செய்யப்பட்ட வழக்கில் சதித் திட்டம் தீட்டியதாக நடிகர் திலீப் கடந்தாண்டு கைது செய்யப்பட்டார். 85 நாள் சிறைவாசத்துக்கு பின் ஜாமீனில்    விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், நடிகை பலாத்காரம் செய்யப்பட்டபோது    எடுக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை தனக்கு வழங்க வேண்டும் என்று எர்ணாகுளம் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடிகர் திலீப் மனு  தாக்கல்   செய்தார். இதற்குகேரள அரசு  எதிர்ப்பு  தெரிவித்தது.  இதையடுத்து,  திலீப் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர், உயர் நீதிமன்றமும் இதை உறுதி செய்தது. இதனால், இரு வாரங்களுக்கு முன்    உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு ெசய்தார்.

இந்த வழக்கில் கேரள அரசு நேற்று முன்தினம்  தாக்கல் செய்த பதில் மனுவில்,  ‘நடிகை பலாத்காரம்   செய்யப்பட்ட போது  எடுக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை   திலீப்புக்கு வழங்கினால்  அது நடிகையின் புகழுக்கும், தனி மனித உரிமைக்கும்   பாதிப்பை ஏற்படுத்தும்.  மேலும், நடிகையின் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம். ’ என கூறப்பட்டது. இதை பரிசீலித்த நீதிமன்றம், விசாரணையை  ஜனவரி   23க்கு ஒத்திவைத்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: