தூத்துக்குடி ஆலைக்கழிவு தொடர்பாக வேதாந்தா, மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ்: மதுரை ஐகோர்ட் கிளை

மதுரை: மாசு ஏற்படுத்தும் வகையில் ஆலைக்கழிவுகளை அகற்றிய வழக்கில் வேதாந்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வேதாந்தா நிறுவனம் மீது குற்றவியல் நடவடிக்கை கோரி தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்குமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நெல்லையை சேர்ந்த முத்துராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் வேதாந்த நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை 3.52 டன் அளவு கழிவுகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுசூழல் பொறியாளர் ஆகியோரது கவனத்திற்கு கொண்டு செல்லாமல் உப்பாற்றில் கொட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போன்று, இதே அளவிலான கழிவுகளை தனியார் பட்டா நிலத்திலும் கொட்டி வைத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாசு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் புகார் அளித்தால், மாசுக் கட்டுப்பாடு மற்றும் தடுப்புச் சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அவர்கள் அதில் கவனம் செலுத்தத் தயங்குகின்றனர். மேலும் சுற்று சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட வேதாந்தா நிறுவனம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன் மற்றும் சுவாமிநாதன் அமர்வு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தலைவர் மற்றும் வேதாந்தா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து வழக்கு டிசம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: