கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் பாதிப்பு எதிர்பார்ப்பை விட அதிகம்: மத்தியக்குழு தலைவர் டேனியல் ரிச்சர்டு

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் நாங்கள் எதிர்பார்த்ததை விட புயல் சேதம் அதிகமாக பாதித்துள்ளது என மத்தியக்குழு தலைவர் டேனியல் ரிச்சர்டு பேட்டியளித்தார். தமிழகத்தில் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையில் 7பேர் கொண்ட குழுவினர் பார்வையிட்டு ஆய்வு வருகின்றனர். நேற்றுப் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு செய்த மத்தியக் குழுவினர், இன்று காலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். காலையில் ஒரத்தநாடு புதூரில் புயலால் சேதமடைந்த வீடுகளையும் புயலால் சாய்ந்த தென்னைகளையும் பார்வையிட்டனர். சாலை, குடிநீர், மின்சாரம் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் ஆய்வு செய்தனர்.

அப்போது எங்கள் பகுதியில் விசைபடகுகள், நாட்டுப்படகுகள், அதிக அளவில் சேதமாகி உள்ளது. இதனால் மல்லிப்பட்டினம், வேதுபாவச்சத்திரம், அதிராம்பட்டினம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உள்ள மீனர்வர்களின் 246 விசைப்படகுகளும், 832 நாட்டுப்படகுகளும், 47 கட்டுமரங்களும், ஆயிரத்து 428 வலைகள், ஆயிரத்து 440 மோட்டார் என்ஜின்கள் என பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் ரூ.72 கோடியே 44 லட்சத்து 50 ஆயிரம் வரை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட இந்த பகுதிகளை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும். மேலும் சேதமடைந்த படகுகளுக்கு பதில் புதிய படகுகள் அரசுதர வேண்டும்.  என பல்வேறு குறைகளைத் தெரிவித்த பொதுமக்கள், புயலில் சேதமடைந்த சொத்துக்களுக்குக் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர்  டேனியல் ரிச்சர்டு கூறியதாவது:-புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் உள்ள இடங்களை இன்று காலை முதல் ஆய்வு செய்தோம். பார்வையிட்ட இடங்களில் எல்லாம் மக்கள் கூடுதல் நிவாரணம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். புயல் சேதம் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. புயல் சேத விவரங்கள் குறித்து மத்திய அரசிடம் அறிக்கையை சமர்பிப்போம் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர்  டேனியல் ரிச்சர்டு கூறினார். அதன்பின்னர், மத்தியக் குழுவினர் திருவாரூர் மாவட்டத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: