புயல் நிவாரணமாக ஒருநாள் ஊதியம்: டாஸ்மாக் பணியாளர் சங்கம் முதல்வருக்கு கடிதம்

சென்னை: கஜா புயல் நிவாரணமாக ஒருநாள் ஊதியத்தை தர தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த கடிதத்தை முதல்வருக்கு அனுப்பியுள்ளது. இதுகுறித்து பணியாளர் சங்கம் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் சமீபத்தில் டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் கஜா புயலினால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு சேதமடைந்துள்ளன. புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் மீளா துயர்கொண்டு சொல்லொணா கஷ்டங்களை அடைந்து வரும் தமிழக மக்களின் துயர் துடைக்கவும், அவர்களுக்கு அவசர உதவிகள் செய்வது அத்தியாவசியமாக இருக்கிறது.

எனவே, புயலினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களின் துயர் துடைத்திட நிவாரணம் வழங்கும் வகையில் டாஸ்மாக் பணியாளர்களின் ஒரு நாள் ஊதியத்தை அரசே பிடித்தம் செய்து மக்களுக்கு நிவாரணமாக வழங்கிடவும், அதற்கு உரிய அரசாணைகள் வெளியிடவும் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதுடன் தனது ஒப்புதலையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: