மத்திய அரசின் உதவியுடன் புயல் மீட்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக செய்கிறது: தமிழிசை பேட்டி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளான கோவில்பட்டி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று பார்வையிட்டார். பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மற்ற மாவட்டங்களைவிட புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் கோரத்தாண்டவம் அதிகம். தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு பணிகளை சிறப்பாக செய்து வருகிறது.

மத்திய அரசின் உதவியால்தான் மாநில அரசு இப்பணிகளை செய்து வருகிறது. குறிப்பாக மின்வாரிய ஊழியர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வரவழைக்கப்பட்டு சீரமைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி இருப்பது கண்டனத்துக்குரியது. தமிழக எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் களத்தில் இறங்கி மக்கள் பிரச்னைகளை கவனித்து களப்பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: