அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய மொபைல் ஆப்ஸ்

புதுடெல்லி: அரசு பத்திரங்களில் சில்லரை முதலீட்டை ஈர்க்கவும், எளிமையாக்கும் வகையிலும் ‘என்எஸ்இ கோ பிட்’ என்ற புதிய மொபைல் ஆப்சையும், இணைய தளத்தையும் தேசிய பங்குச்சந்தை அறிமுகம் செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தையில் பதிவு செய்துள்ள முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகம் செய்யும் உறுப்பினர்கள் பயன்படுத்த முடியும்.

யுபிஐ முறையில் நேரடியாக வங்கிக்கணக்கில் இருந்து பணம் செலுத்தி முதலீடு செய்யலாம். எனவே, பீம் ஆப்ஸ் போன்ற யுபிஐ அடிப்படையிலான ஆப்ஸ்களை வைத்திருப்பவர்களுக்கு இது சுலபமான வழிமுறையாக இருக்கும். இவற்றை தொடங்கி வைத்த செபி தலைவர் அஜய் தியாகி, டிஜிட்டல் பேமன்ட் அதிகரித்து வரும் நிலையில் இது ஒரு மைல்கல்லாக இருக்கும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: