லோக்தளம் கட்சியில் இருந்து மூத்த மகன் அஜய் சிங் நீக்கம்: கட்சி தலைவர் சவுதலா அதிரடி

சண்டிகர்: கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக லோக்தளம் கட்சியின் செயலாளர் அஜய் சிங்கை நீக்கி, கட்சி தலைவரும், அவரது தந்தையுமான ஓம் பிரகாஷ் சவுதலா உத்தரவிட்டுள்ளார். இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதலா. அரியானா மாநில முன்னாள் முதல்வரான இவர், ஆசிரியர்கள் நியமன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது மூத்த மகன் அஜய் சிங். இவர் அரியானா மாநில லோக்தளம் கட்சியின் பொதுச்செயலாளராக உள்ளார். இவரும் ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை அடைந்தவர். தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

சவுதலாவின் குடும்பத்தினர் இடையே கட்சி விவகாரம் தொடர்பாக பல ஆண்டுகளாக மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில், ஜாமீனில் வந்துள்ள அஜய் சிங் நாளை மறுநாள் கட்சியின் செயற்குழு கூட்டத்தை கூட்ட அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, தனது அனுமதி பெறாமல் செயற்குழுவை கூட்டுவதற்காக அஜய் சிங்கை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி சவுதலா உத்தரவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: