சிறுநீர் கழிப்பதற்காக நடுவழியில் ரயிலை நிறுத்தினார் டிரைவர்: விசாரணைக்கு நிர்வாகம் உத்தரவு

மும்பை: எக்ஸ்பிரஸ் ரயிலை நடுவழியில் நிறுத்திவிட்டு அந்த ரயிலின் டிரைவர்  கீழே இறங்கி சிறுநீர் கழித்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. குஜராத்தில் இருந்து காந்திதாம் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் காலை 10.30 மணியளவில் திடீரென வசாய் அருகே நிறுத்தப்பட்டது. சிக்னல் இருந்தும் ரயில் ஏன் நடுவழியில் நிறுத்தப்பட்டது எனத் தெரியாமல் பயணிகள் குழம்பிப் போனார்கள். அப்போது, வசாய் பகுதியில் ரயில்வே பாதை அருகே ஓட்டல் நடத்தி வரும் எச்.எஸ்.தொசானி என்பவர் அந்த வழியாக நடந்து சென்றார்.  அவர் எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதையும் அந்த ரயில்  டிரைவர் கீழே இறங்கி சிறுநீர் கழிப்பதையும் பார்த்தார்.

அதை தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய அந்த வீடியோ காட்சி வைரலாக பரவியது. இந்த சம்பவம் குறித்து இலாகாபூர்வ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக மேற்கு ரயில்வேயின் தலைமை செய்தி தொடர்பாளர் கஜானன் மகாபூர்கர் கூறினார். அவர் கூறுகையில், ‘‘சிறுநீர் கழிப்பதற்காக டிரைவர் ரயிலை நிறுத்தியிருக்க கூடாது. எக்ஸ்பிரஸ் ரயில்களில் பாத்ரூம் வசதி செய்யப்பட்டிப்பது வழக்கம். ஆனாலும், ரயிலை டிரைவர் ஏன் நடுவழியில் நிறுத்தினார் என்பது குறித்து விசாரிக்கப்படும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: