நெல்லை அருகே பைக், லாரி மீது கார் மோதல் அரசு பெண் ஊழியர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி சாவு

நாங்குநேரி: நெல்லை அருகே பைக், லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் அரசு பெண் ஊழியர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி இறந்தனர். நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அடுத்த கருப்புக்கட்டியை சேர்ந்தவர் ஈசாக் (70). ஆடு வியாபாரி. நேற்று காலை இவர், வள்ளியூர் சந்தையில் ஆடுகளை வாங்கி மொபட்டில் ஏற்றிக் கொண்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். மூன்றடைப்பில் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றபோது எதிரே வந்த கார், பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஈசாக், சம்பவ இடத்திலேயே இறந்தார். தொடர்ந்து தறிகெட்டு ஓடிய கார், சென்டர் மீடியனை கடந்து எதிரே வாழைக்காய் லோடுடன் சென்ற லாரி மீது மோதியது. இதில் நடுரோட்டில் லாரி கவிழ்ந்தது. காரின் முன்பகுதி சுக்குநூறானது.

காரில் வந்த பேச்சியம்மாள் (55), கார் டிரைவர் பாப்புலர் (48) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். லாரி டிரைவர் காமராஜ் (55) லேசான காயத்துடன் தப்பினார். தகவலறிந்து மூன்றடைப்பு போலீசார் மற்றும் நாங்குநேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியானவர்களின் உடல்கள் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், பேச்சியம்மாள் நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: