தமிழிசை புகாரின் பேரில் மாணவி சோபியா கைது: மனித உரிமை ஆணைய நீதிபதி தூத்துக்குடி போலீசாரிடம் விசாரணை

நெல்லை:  தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல டாக்டர் சாமியின் மகள் லூயிஸ் சோபியா (25). கனடா நாட்டில் ஆராய்ச்சி படிப்பு பயின்று வருகிறார். கடந்த செப்டம்பர் 3-ம்தேதி விடுமுறைக்காக ஊர் திரும்பினார்.  சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வந்த விமானத்தில் தமிழக பாஜ தலைவர் தமிழிசையை பார்த்து பாசிச பாஜ ஆட்சி ஒழிக என்று சத்தமிட்டார். இதுதொடர்பாக, தமிழிசை விமான நிலைய அதிகாரியிடம் அளித்த புகாரின்பேரில்  சோபியா கைது செய்யப்பட்டார். விசாரணை என்ற பெயரில் சோபியாவை 8 மணி நேரம் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். இதனால் அவர் மனஉளைச்சலடைந்தார்.

இதுகுறித்து சோபியாவின் தந்தை டாக்டர் சாமி, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார். அதில் சட்டத்திற்கு புறம்பாக  8 மணி நேரம் எனது மகளை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் திருமலை மற்றும் போலீசார்  விசாரணை என்ற பெயரில் அடைத்து வைத்திருந்தனர். எனவே இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த புகார் குறித்து, மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன்  முன்னிலையில் ேநற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சோபியாவின் தந்தை ஆஜரானார். புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்ஐக்கள் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி டிசம்பர் 27ம் தேதிக்கு விசாரணையை  ஒத்திவைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: