லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலகாபாத் நகரம், ‘பிரயாக்ராஜ்’ என பெயர் மாற்றம் செய்வதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலகாபாத் நகரத்தில்தான் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கின்றன. கடந்த காலங்களில் இது பிரயாக் என்று அழைக்கப்பட்டதாக வரலாறும் உள்ளது. பிரயாக் நகரின் பெயர், முகலாயர் ஆட்சிக்காலத்தில் அலகாபாத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனால், அலகாபாத் என்ற பெயரை அடுத்த ஆண்டு அங்கு நடைபெற உள்ள கும்பமேளாவிற்கு முன்னதாக பிரயாக்ராஜ் என மாற்ற வேண்டும் என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
