ஜம்மு காஷ்மீரில் போலீஸ்காரர் சுட்டு கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் காவலர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டம் மஜல்தா பகுதியை சேர்ந்த சோன் கிராமத்தில் உள்ள காட்டுக்குள் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அந்த பகுதியில் நேற்று முன்தினம் காவல்துறையினர் தீவிர தேடுதல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் காவல்துறையினர் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் காவலர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். பின்னர் தீவிரவாதிகள் காட்டுக்குள் சென்று மறைந்து விட்டனர். இதையடுத்து தப்பிய தீவிரவாதிகளை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Related Stories: