குட்கா முறைகேடு வழக்கில் கைதான குடோன் உரிமையாளர் மாதவராவ் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை : குட்கா முறைகேடு வழக்கில் குடோன் உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா ஆகியோரது ஜாமின் மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  சாட்சிகளை கலைக்கக் கூடும் என்ற சிபிஐ எதிர்ப்பை ஏற்று, சிறப்பு நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நடந்துள்ள குட்கா ஊழல் பற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. அது, கடந்த மாதம் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை செய்து. குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாச ராவ் மற்றும்  உமாசங்கர் குப்தா, உணவுபாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன்,  சுகாதார ஆய்வாளர்  சிவகுமார், கலால்துறை அதிகாரி பாண்டியன் ஆகிய 6 பேரை கைது செய்தது.

முன்னதாக குட்கா முறைகேடு வழக்கில் கைதான உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்முருகன் ஜாமீன் கோரி மனு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது

குட்கா முறைகேடு வழக்கில் கைதான உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்முருகன் ஜாமீன் கோரி மனு மீது சிபிஐ பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்.22ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்நிலையில் குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள்  சீனிவாச ராவ் மற்றும் உமாசங்கர் குப்தா ஆகியோரது ஜாமீன் மனுக்கள் இன்று சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது குட்கா முறைகேடு வழக்கில் விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை என்று சிபிஐ தரப்பு வாதிட்டது. மேலும் குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபர்களை ஜாமீனில் விடுதலை செய்தால் வழக்கு விசாரணை பாதிக்கும் என்றும் அவ்வாறு மூவரையும் விடுவித்தால் சாட்சிகளை கலைக்கக்கூடும் என்றும் சிபிஐ தெரிவித்தது. இதனைத் தொடர்ந்த சிபிஐ வாதத்தை ஏற்ற நீதிமன்றம், மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா ஆகியோரது ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்தது. மேலும் சுகாதார ஆய்வாளர் சிவகுமாரின் ஜாமீன் மனு குறித்து வருகிற 23ம் தேதி சிபிஐ பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: