சந்திராயன் - 2 விண்கல இன்ஜின் சோதனை வெற்றி

பெங்களூரு : ஜனவரி மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ள சந்திராயன் - 2 விண்கலத்தின் இன்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திராயன்-2 விண்கலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளது. நிலாவை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட உள்ள சந்திராயன்-2 விண்கலம் தயாரிப்பின் முக்கிய அம்சங்கள் நிறைவு  பெற்றுவிட்டன. இந்த விண்கலம், ஜி.எஸ்.எல்.வி. எம்.கே.3 மூலம் அடுத்த ஆண்டு விண்ணில் பாய உள்ளது. இதற்கு மிக முக்கியமாக இன்ஜின் சி.இ.20 தேவை. இந்த இன்ஜின் செயற்கைக்கோள் இயக்கத்தின் மிக முக்கிய  பணிகளை மேற்கொள்கிறது. திரவ ஆக்சிஜனுடன் இணைந்து வாயுவை உற்பத்தி செய்கிறது. மேலும், திரவ ஹைட்ரஜன் உற்பத்தி செய்யவும் இன்ஜின்  பயன்படுத்தப்படுகிறது. இதற்கான இன்ஜின்  சி.இ.20 மகேந்திரகிரியில் உள்ள  இஸ்ரோ உந்து வளாகத்தில் தயாராகி வருகிறது.

இதன் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ அதிகாரிகள் கூறுகையில் ‘’சந்திராயன்-2ல் ஜிஎஸ்எல்வி எம்கே.-3 செயற்கைக்கோளின் முக்கிய பாகமான இன்ஜின் சோதனை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இன்ஜின் இயக்கப்பட்டு சோதனை  செய்யப்பட்டது. அனைத்து இயக்கங்களும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. இந்த சோதனை 25 வினாடிகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சந்திராயன்- 1 விண்கலத்தைப் போல இல்லாமல் இந்த சந்திராயன்- 2 விண்கலம் மிகவும்  மென்மையாக லூனார் தரைத்தளத்தில் இறங்கும். ஏற்கனவே, சந்திராயன் -1 வி்ண்கலம் அனுப்பியுள்ள தகவல்களை வைத்து அதற்கேற்றார்போல சந்திராயன் -2 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: