124 பிரிவு சட்டத்தின் கீழ் நக்கீரன் கோபாலை கைது செய்ய முகாந்திரம் இல்லை : நக்கீரன் தரப்பு வழக்கறிஞர் வாதம்

சென்னை : 124 பிரிவு சட்டத்தின் கீழ் நக்கீரன் கோபாலை கைது செய்ய முகாந்திரம் இல்லை என்று அல்லிக்குளம் நீதிமன்றத்தில் நக்கீரன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். தாம் பிரசுரித்த கட்டுரையில் ஆளுநரை எந்த வகையிலும் கோபால் மிரட்டவில்லை என்றும் கட்டுரை மூலம் ஆளுநர் பணியில் தலையிடுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நக்கீரன் கோபால் தரப்பில் அவரது வழக்கறிஞர் பி.டி.பெருமாள் நீதிமன்றத்தில் வாதம் செய்தார். ஏப்ரல் மாதம் வெளியான கட்டுரைக்கு இப்போது வழக்குப் போடுவதாக புகார் கூறப்படுகிறது. முன்னதாக நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் கோபால் மருத்துவ பரிசோதனை முடிந்து சென்னை எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: