நக்கீரன் கோபாலை தொடர்ந்து நக்கீரன் இணையதள ஆசிரியர் வசந்த் கைது

சென்னை : நக்கீரன் ஆசிரியர் கோபாலை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நக்கீரன் இணையதள ஆசிரியர் வசந்த் விடுவிக்கப்பட்டார். இதனிடையே முதன்மை ஆசிரியர் தாமோதரன் பிரகாஷ், பொறுப்பு ஆசிரியர் கோவி.லெனின், தலைமை நிரூபர் இளையசெல்வன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் தேடி வருவதாக தகவல்கள் கிடைக்கின்றன. முன்னதாக  சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் கோபால் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார்.கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலிடம் சிந்தாதிரிபேட்டை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: