நவராத்தி விழாவையொட்டி புதியவகை நடனப் பயிற்சி : ஸ்கேடிங் சக்கரம் அணிந்து நடனம்

குஜராத்: நவராத்தி விழாவையொட்டி குஜராத் மாநிலம் சூரத்தில் பெண்கள் சிலர் புதிய முறையில் கர்பா நடன பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். நவராத்தி விழா கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களைகட்டி வரும் நிலையில் அதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன.

சூரத் பகுதிகளில் உள்ள பெண்கள் கால்களில் ஸ்கேடிங் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு கர்பா நடன பயிற்சியில் ஈடுபட்டனர். புதுமை நிகழ்த்தும் நோக்கில் சால்சா, ஹிப்ஹாப் போன்றவற்றை கர்பா நடனத்துடன் புகுத்தி இருப்பதாக பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். வண்ண ஆடைகளில் இசைக்கேற்றவாறு  ஸ்கேடிங் நடன பயிற்சியில் ஈடுபட்டது வெகுவாக கவர்ந்துள்ளது.   

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: