வருமானவரி துறையை ஏவி மிரட்டி பார்க்கிறது: தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது: மத்திய பாஜ அரசுக்கு கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: மத்திய பாஜ அரசு வருமான வரித்துறையை ஏவி மிரட்டல் விடுவதன் மூலம் திமுக கூட்டணியின் வெற்றியை தடுத்து விட முடியாது என்று மத்திய பாஜ அரசுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். துரைமுருகன் (திமுக பொது செயலாளர்) : எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் இப்போது செய்யப்பட்டிருக்கும் சோதனை என்பது அரசியல் உள்நோக்கத்தோடு செய்யப்பட்டிருப்பதாகவே திமுக கருதுகிறது. ஏனென்றால் வேலுவின் கெஸ்ட் ஹவுஸில் தலைவர் மு.க.ஸ்டாலின் தங்கியிருந்தார். அவர் தங்கியிருக்கின்றபோதே சோதனை நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. தோற்று போக போகிறோம் என்ற கட்டத்துக்கு வந்த அதிமுக, மத்திய அரசு மூலம், வருமான வரித்துறையை தூண்டிவிட்டு இதை செய்து இருக்கிறது.இதனால், திமுகவினர் துவண்டு விடமாட்டார்கள். மேலும் உற்சாகத்தோடு பணியாற்றுவார்கள். இதற்கு எங்களுடைய கண்டனத்தை பலமாக திமுகவின் பொதுச் செயலாளர் என்ற முறையில் அதிருப்தியை தெரிவித்து கொள்கிறேன். இது அரசியல் பயமுறுத்தும் தன்மை. இது எதிர்ப்பு வாக்காக மாறும். எங்கள் மேல் ஒரு அனுதாபத்தை கொண்டு வரும். கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுதியிலிருந்து புறப்பட்டு, தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தொடங்கிய சிறிது நேரத்தில், எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம், எ.வ.வேலுவின் தேர்தல் பணிகளை முடக்கி விடலாம் என பாஜ திட்டம் தீட்டி செயல்படுகிறது.வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): மத்திய பாஜ அரசு தனது அரசியல் ஆதாயத்துக்காக வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சி.பி.ஐ., போன்ற அமைப்புகளை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் செய்து வரும் அதே மிரட்டல், அதிகார அத்துமீறலை தமிழ்நாட்டிலும் அரங்கேற்றி இருக்கிறது.அரசியல் களத்தில் அதிமுக – பாஜ கூட்டணியை எதிர்த்து மக்கள் சக்தியைத் திரட்டி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் ஆதரவைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பாஜ அரசு வருமான வரித்துறையை ஏவி மிரட்டிப் பார்க்கிறது. மத்திய பாஜ அரசின் இத்தகைய மிரட்டல்களால் ஒருபோதும் திமுக கூட்டணியின் வெற்றியைத் தடுத்து விட முடியாது.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை என்ற பெயரில் வருமான வரித்துறையினர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய செயல்கள் மூலம் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றியை தடுத்து விட முடியாது. உள்நோக்கம் கொண்ட அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கு புறம்பானது என எச்சரிக்கிறோம்….

The post வருமானவரி துறையை ஏவி மிரட்டி பார்க்கிறது: தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது: மத்திய பாஜ அரசுக்கு கட்சி தலைவர்கள் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: