காஷ்மீர் எல்லையில் மீண்டும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தேவை: ராணுவ தளபதி பிபின் ராவத் கருத்து

புதுடெல்லி: ‘‘ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், எல்லைக் கட்டுப்பாடு கோட்டு பகுதியில் மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட  வேண்டும்’’ என்று ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் 3 போலீசாரை தீவிரவாதிகள் கடத்திச் சென்று கொன்றனர் இந்நிலையில், டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராணுவ தளபதி பிபின் ராவத்  கூறியதாவது :எல்லைப் பகுதிகளில் பலமுனைகளில் இருந்தும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அதே நேரம், அமைதி பேச்சுவார்த்தைக்கும் பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. ஒரே நேரத்தில் இந்த  இரண்டும் நடக்க வாய்ப்பில்லை. காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  அதற்கு, மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் தேவைப்படுவதாக கருதுகிறேன். ஆனால், அதை செயல்படுத்தும் யுத்தியை  தெரிவிக்க விரும்பவில்லை. இவ்வாறு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: