திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே விஐபிக்கள் சுவாமி தரிசனம்: துணை ஜனாதிபதி வேண்டுகோள்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் விஐபிக்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க வரவேண்டும்  என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்தார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று காலை குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் முன்னிலையில் ‘இஸ்திகப்பால்’ மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த  பிரசாதங்களை வழங்கிய தேவஸ்தான அதிகாரிகள், 2019ம் ஆண்டுக்கான டைரி மற்றும் காலண்டர்களை வழங்கினர்.பின்னர், கோயிலுக்கு வெளியே வந்த துணை ஜனாதிபதி நிருபர்களிடம் கூறியதாவது:

துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதால் குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்தேன். உலகம் முழுவதிலும் இருந்து ஏழுமலையானை தரிசிக்க  பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

எனவே முக்கிய பிரமுகர்கள் யாராக இருந்தாலும், பக்தர்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் சுவாமியை தரிசனம் செய்ய வரவேண்டும். இந்த நடைமுறையை  தேவஸ்தான அதிகாரிகளும் செயல்படுத்த வேண்டும். அப்போது தான்  பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: