மதுரவாயல் பறக்கும் சாலை குறித்து 10 நாளில் கலந்தாய்வு கூட்டம்: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை:  மதுரவாயல் பறக்கும் சாலை குறித்து 10 நாளில் கலந்தாய்வு கூட்டம் நடைபெறும் என்று  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், துறைமுகம் சார்ந்த பொருளாதார மேம்பாடுகள் குறித்த 2 நாள் கருத்தரங்கம், கிண்டியில் நேற்று தொடங்கியது. மத்திய கப்பல் துறை இணை செயலாளர் கைலாஷ்குமார் அகர்வால், சென்னை துறைமுக தலைவர் பி.ரவீந்திரன், இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் ஆர்.தினேஷ் முன்னிலை வகித்தனர். மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பொருளாதாரத்தில் துறைமுகங்களின் பங்கு குறித்த நூலினை வெளியிட்டு பேசியதாவது:

95 சதவீத வெளிநாட்டு வர்த்தகங்கள் துறைமுகங்கள் மூலமாகத்தான் நடக்கிறது. சாகர்மாலா திட்டத்தின் கீழ் 577 திட்டங்கள் 8.57 லட்சம் கோடி மதிப்பில் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்கின் மூலம் நாட்டில் உள்ள துறைமுகங்களின் திறன்மேம்பாடுகள் மற்றும் அதனை சார்ந்த தொழில்களின் வளர்ச்சி குறித்தும் கலந்தாலோசிக்கப்பட உள்ளது. கன்னியாகுமரியில் இனயம் துறைமுகத்திற்கான ஆய்வு அறிக்கை முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கை விரைவில் தெடங்கப்படும். மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டம் இன்னும் 10 நாட்களில் நடைபெறவுள்ளது,’’ என்றார். கருத்தரங்கில் ஏற்றுமதியாளர்கள், தொழிலதிபர்கள், அரசு துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: