25% கமிஷன் பேரம் படியாவிட்டால் தமிழகத்தில் ஸ்மார்ட் வகுப்பறைகள் வராது: அதிமுக அரசு மீது ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் ஸ்மார்ட் வகுப்புகள் வராததற்கு 25 சதவீதம் கமிஷன் கேட்கப்படுவதே காரணம் என்று அதிமுக அரசு மீது நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்காக ஸ்மார்ட் வகுப்பறை திட்டம் கடந்த 2011-12ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதன்பின் 7  ஆண்டுகளாகியும் தமிழக அரசு பள்ளிகளில் இத்திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. மத்திய அரசு இத்திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்தி முடிக்க வேண்டும் என்று  எச்சரித்துள்ளது. ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்திற்காக இதுவரை மொத்தம் 5 முறை ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. இத்திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீட்டில் 25 சதவீதம் கையூட்டாக  தர வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் கேட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு அஞ்சி முதல் 3 ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளில் ஒருவர் கூட பங்கேற்கவில்லை. இப்போது ஐந்தாவது  முறையாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. பேரம் படியாத பட்சத்தில் இப்போதும் ஸ்மார்ட் வகுப்புத் திட்டம் நடைமுறைக்கு வருவது ஐயம்தான்.தமிழக அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளை தொடங்கும் திட்டத்தை ஆட்சிக்கு வந்ததும் 2011 முதல் 3 முதல்வர்களையும், 9 அமைச்சர்களையும் ஸ்மார்ட் வகுப்புத் திட்டம் சந்தித்து  விட்டது. ஆனாலும் இன்னும் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. இத்தகைய துரோகத்தை செய்த அதிமுக அரசு பதவி விலக வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: