தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை இணைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும்?: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

மதுரை: தமிழ்நாட்டில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டங்களை செயல்படுத்த எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தமிழக அரசை பார்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் ஐய்யாக்கண்ணு தொடர்ந்த இந்த வழக்கு, நீதிபதிகள்  எம்.எம்.சுந்தரேஷ், சதிஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீலகிரி, கோவை, ஈரோடு மற்றும் நெல்லை மாவட்டங்களில் உற்பத்தியாகும் சிறுசிறு ஆறுகளை அங்காங்கே இணைத்து தடுப்பணைகள் கட்டப்படவேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அரசு தரப்பு நதிகளை, ஆறுகளை, நீர்நிலைகளை இணைப்பது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. என்றாலும் அந்த திட்டங்களை செயல்படுத்த இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து வழக்கை வரும் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: