அமெரிக்காவின் ஜிபிஎஸ்க்கு மாற்றாக இந்திய கார்களில் விரைவில் இஸ்ரோ வழிகாட்டி கருவி

புதுடெல்லி: அமெரிக்காவின் ஜிபிஎஸ் மற்றும் ரஷ்யாவின் குளோனாஸ் நேவிகேஷன் செயற்கைக்கோள்களுக்கு பதிலாக, இஸ்ரோவின் ஐஆர்என்எஸ்எஸ் நேவிகேஷன் செயற்கைக்கோள்கள் மூலம் இயங்கும் வழிகாட்டி கருவிகள்  விரைவில் இந்திய கார்களில் பொருத்தப்படவுள்ளன. இந்தியாவில் ஓடும் டாக்சிகள் பெரும்பாலானவை ஜிபிஎஸ் வழிகாட்டுதலின் மூலம் இயக்கப்படுகின்றன. அமெரிக்காவின் ஜிபிஎஸ் மற்றும் ரஷ்யாவின் குளோனாஸ் நேவிகேஷன் செயற்கைக்கோள்கள் எல்.1 அலைவரிசையை  பன்படுத்துகின்றன. தற்போது இஸ்ரோ ஐஆர்என்எஸ்எஸ் நேவிகேஷன் செயற்கைக்கோள்கள்களை விண்ணில் நிலை நிறுத்தியுள்ளது. மொத்தம் 11 செயற்கைக்கோள்கள் இந்த தொகுப்பில் உள்ளன. இதற்கு ‘நேவிக்’ எனப்  பெயரிடப்பட்டுள்ளது.

இவை எல்.5 அலைவரிசையை பயன்படுத்தும். இதன் சிக்னல்கள் மூலம் செயல்படும் வழிகாட்டி கருவிகளை ராமகிருஷ்ண எலக்ட்ரோ காம்போனென்ட்(ஆர்இசி) என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. எல்100 மற்றும் எல்110 என  பெயரிடப்பட்டுள்ள இந்த இரண்டு வழிகாட்டி கருவிகள் இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டு இந்திய கார்களில் பொருத்தப்படவுள்ளன. இந்த கருவிகள் எஸ்.டி. மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சீனாவின் மொபைல்டேக்  நிறுவனங்களின் உதவியுடன் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: