நாங்கள் மனிதரை தின்னும் புலிகள் அல்ல உச்ச நீதிமன்ற வழக்குகளுக்கு மாநிலங்கள் பயப்பட கூடாது: நீதிபதிகள் கருத்து

புதுடெல்லி: ‘‘நாங்கள் மனிதர்களை கொன்று தின்னும் புலி அல்ல. உச்ச நீதிமன்ற வழக்குகளுக்காக மாநிலங்கள் பயப்பட கூடாது’’ என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திராவில் ‘டிரெமெக்ஸ்’ குழுமம் மாநில அரசின் உரிமம் பெற்று, தாதுக்களை வெட்டி ஏற்றுமதி செய்து வந்தது. இந்நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசின் முன்னாள் செயலாளர் சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘இந்த நிறுவனம், மோனோசைட் உட்பட பலவித தாதுக்களை சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்து வருகிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கவோ அல்லது சிபிஐ விசாரணைக்கோ உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோகூர், தீபக் குப்தா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.டிரெமெக்ஸ் குழுமம் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி வாதிடுகையில், ‘‘மாநில அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகத்தான் இந்த மனுவே உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது சட்ட விரோத வழக்கே அல்ல. சுரங்க உரிமத்தை ரத்து செய்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது, இது, மனுதாரரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக மாறியுள்ளது’’ என்றார். நீதிபதிகள், ‘‘ஒருவர் அல்லது இருவர் கட்டாயப்படுத்தும் நிலையில் மாநில அரசுகள் ஏன் இருக்க வேண்டும்? உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தால், அது பற்றி மாநில அரசுகள் பயப்படக் கூடாது. நாங்கள் என்ன மனிதர்களை கொன்று திண்ணும் புலிகளா?’’ என கேட்டனர். மேலும், விசாரணை 27ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: