மேற்கு வங்க காங்கிரஸ் தலைவராக மித்ரா தேர்வு

புதுடெல்லி: மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக சோமேந்திர நாத் மித்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற, மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் இப்போதே தயாராகி வருகிறது. இதற்காக, கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பவர்களை கட்சியின்  தலைவர் ராகுல் காந்தி மாற்றி வருகிறார்.. இதன் ஒரு பகுதியாக, இம்மாநில காங்கிரசின் புதிய தலைவராக சோமேந்திர நாத் மித்ராவை  அவர் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, இப்பதவியை வகித்து வந்த அதிர் ரஞ்சன் சவுத்ரி, கட்சியின் மாநில தேர்தல் பிரசார குழு தலைவராக மாற்றப்பட்டுள்ளார். இது தவிர, 4 பேர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் அறிக்கை குழு தலைவராக அபிஜித் முகர்ஜியும், தகவல் தொடர்புதுறை தலைவராக அமிதபா சக்ரவர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: