10 கோடி ஏழைகள் பயன்பெறும் சுகாதார காப்பீட்டு திட்டத்தை நாளை துவக்கி வைக்கிறார் பிரதமர்

புதுடெல்லி: நாட்டில் உள்ள 10 கோடி ஏழை குடும்பத்தினர் சுகாதார காப்பீடு பெறும் திட்டத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம்’. இதில், ஆண்டு தோறும் 10 கோடி ஏழை குடும்பத்தினர், ரூ.5 லட்சம் மதிப்புக்கு இலவச சிகிச்சை பெறமுடியும். நாளை தொடங்கப்படும் இந்த திட்டம் ஜனசங்க நிறுவனரான தீன்தயாள் உபாத்யாய் பிறந்தநாளான வரும் 25ம் தேதி முதல் முறையாக செயல்பாட்டுக்கு வரும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அலுவலகம் வெளியிட்டுள் அறிக்கையில், ‘27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த திட்டத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் ஞாயிறன்று இத்திட்டத்தை பிரதமர் துவக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியின்போது அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பிரதமர் பார்வையிடுகிறார். பயனாளிகள் தேர்வும் அப்போது நடைபெறுகிறது. இந்த திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள தனியார், பொது நிறுவனத்தை சேர்ந்த 15 ஆயிரம் மருத்துவமனைகள் தங்களை இணைத்துகொள்ள முன்வந்துள்ளன. இந்த நிகழ்ச்சியின்போது சைபாசா, கொடேர்மா ஆகிய மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல்லையும் பிரதமர் நாட்டுகிறார்’ என்று கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: