வளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாட்டில் மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்

மதுரை: மதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். தோப்பூர் அருகே உள்ள கோணாபுதுப்பட்டியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இதனையடுத்து மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: வளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது.

alignment=
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக தமிழகத்தில் அமையவுள்ள மருத்துவமனை செயல்படும். ரூ.1500 கோடி செலவில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது சுகாதாரத்துறைக்கு மிகப்பெரிய வளர்ச்சியை கொடுக்கும். எய்ம்ஸ் மருத்துவமனை அமைய நிலம், மின்சாரம், நான்கு வழிச்சாலை, உள்கட்டமைப்பு எல்லாம் தயாராக உள்ளது. 2 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம்- பதிவு இலவசம்!

Related Stories: