மேலூர் நகராட்சியில் தரமற்ற ரோடு போடுவதாக பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

மேலூர்: மேலூர் நகராட்சியில் போடப்பட்டு வரும் தார் ரோடு தரமற்ற முறையில் உள்ளதாகக் கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. மேலூர் பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள பெரியாற்று கால்வாயின் ஒரு பகுதியில் இருந்து தெற்குபட்டி வழியாக நான்குவழி சாலையை இணைக்கும் வகையில் தார் ரோடு போடும் பணி சில நாட்களுக்கு முன்பு துவங்கியது. ரூ.50 லட்சம் மதிப்பில் துவங்கிய இப்பணியின் முதற்கட்டமாக கற்கள் கொட்டி பரப்பப்பட்டது. நேற்று சாலை அமைக்கும் பணிக்காக இயந்திரங்களுடன் காண்ட்ராக்டர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அங்கு வந்தனர். தாரை கொட்டி பரப்பி சாலையை போட ஆரம்பித்தனர்.

திடீனெ மேலூர் நகராட்சியின் முன்னாள் சேர்மனும், அமமுக கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளருமான சரவணன் தலைமையில் தெற்குபட்டியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். தரமற்ற வகையில் சாலை அமைக்கப்படுவதாக கூறி முற்றுகை போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு மேலூர் டிஎஸ்பி சக்ரவர்த்தி அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். குறிப்பிட்ட தரத்தில் ரோடு அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினர். இதனால் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. நகராட்சியை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் கூறியதாவது: இதே சரவணன் 5 ஆண்டுகள் நகராட்சி தலைவராக இருந்தார். அந்த காலக்கட்டத்தில் அவர் மேற்கொண்ட எந்த பணியிலும் இதுபோல் தரம் குறித்து எந்த பேச்சையும் எடுக்கவில்லை. தற்போது கட்சி மாறியதால் இவ்வாறு பேசுகிறார். தனக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?’ என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: