டிரினிடாட்: இலங்கை அணியுடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியில், முன்வரிசை பேட்ஸ்மேன் டிவோன் ஸ்மித் 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இடம் பிடித்துள்ளார். அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி, மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயின், குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் ஜூன் 6ம் தேதி தொடங்குகிறது. 2வது டெஸ்ட் செயின்ட் லூசியாவிலும் (ஜூன் 14-18), கடைசி டெஸ்ட் பார்படாஸ், கென்சிங்டன் ஓவல் மைதானத்திலும் (ஜூன் 23-27) நடைபெற உள்ளன. இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஜேசன் ஹோல்டர் தலைமையிலான அணியில் மொத்தம் 13 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.