பெரியாரின் 49வது நினைவு நாளை ஒட்டி, அமைதி பேரணி நடைபெற்றது

சென்னை: பெரியாரின் 49வது நினைவு நாளை ஒட்டி சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலையில் இருந்து வேப்பேரியில் உள்ள பெரியார் திடல் வரை, திராவிட கழகத்தினர் அமைதி பேரணி மேற்கொண்டனர். சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவு இடத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, உள்ளிட்டவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதையை செலுத்தினர். இதனிடையே மக்கள் நீதிமைய கட்சி தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் தந்தை பெரியாருக்கு புகழ் வணக்கம் செலுத்தியுள்ளார். பாகுபாடு இல்லை உயர்வு தாழ்வு இல்லை பிறப்பில் பெருமை இல்லை என இல்லைகளைப் பிரச்சாரம் செய்ததோடு சமச்சமூகத்தில் பெண்ணுலகம் உண்டு என்று நம்பிக்கையையும் விதைத்த பெரியாரின் நினைவுநாளில், பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்து அவருக்கு வணக்கம் செய்கிறேன். என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.   …

The post பெரியாரின் 49வது நினைவு நாளை ஒட்டி, அமைதி பேரணி நடைபெற்றது appeared first on Dinakaran.

Related Stories: