எத்தனை பேருடன்..? ரசிகரின் ஆபாச கேள்வி: நடிகை ஷாக் பதில்

ஐதராபாத்: நடிகை விஷ்ணு பிரியா தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நடிகையாகி வலம் வருபவர். அவர் கவர்ச்சியாக டான்ஸ் ஆடும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆகிறது.

தற்போது விஷ்ணு பிரியா தாராள கவர்ச்சி லுக்கில் போட்டோஷூட் நடத்தி இருக்கும் ஸ்டில்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். மேலும் இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரிப்ஷன் பகுதியும் தொடங்கியுள்ளார். அதில் தனது தனிப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியிடுகிறார். அப்போது அதில் கேள்வி, பதில் பகுதியையும் நேற்று தொடங்கினார். இந்த பகுதியை தொடங்கிய முதல் நாளிலேயே அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு விஷ்ணுபிரியா கொடுத்த பதிலும் சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த கேள்வி, பதில் பகுதியில் ரசிகர் ஒருவர், ‘உங்கள் பாடி கவுண்ட்டிங் (எத்தனை பேருடன் பாலியல் உறவு) என்ன?’ என்று கேட்டார். அவரது இந்த கேள்விக்கு உடனடியாக, ‘5 பேர்’ என விஷ்ணு பிரியா பதிலளித்தார். ரசிகரின் இந்த ஆபாச கேள்வியால் நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். அதற்கு விஷ்ணு பிரியா கொடுத்த பதிலும் நெட்டிசன்களுக்கு பேரதிர்ச்சியை தந்தது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீ போல் பரவியது. இதற்கு சமூக ஆர்வலர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் சிலர் வரம்பு மீறி செயல்படுகிறார்கள். விஷ்ணு பிரியாவின் இந்த விவகாரமும் அப்படித்தான். இது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: